நடவடிக்கை செய்தி

கிண்ணியாவில் படகுப்பாதை கவிழ்ந்ததில் காணாமல் போனவர்களை தேடி கடற்படையின் நடவடிக்கை

இன்று (2021 நவம்பர் 23) காலை 0730 மணியளவில் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் குறிஞ்சங்கேணி பாலத்திற்கு அருகில் மக்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதுடன் அங்கு காணாமல் போனவர்களை தேடி கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

23 Nov 2021

ரூ .68 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், அரியாலை கடற்பரப்பில் இன்று (21 நவம்பர் 2021) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, டிங்கி படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 229 கிலோ 350 கிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

21 Nov 2021

998 கிலோவுக்கும் அதிகமான வணிக வெடிபொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது

மன்னார் சாந்திபுரம் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் இன்று (2021 நவம்பர் 20) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 998 கிலோ மற்றும் 750 கிராம் எடையுடைய 7,990 வாட்டர் ஜெல் (Water Gel) குச்சிகளுடன் 02 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

20 Nov 2021

சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற 1437 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைது

கடற்படையினர் 2021 நவம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் மன்னார் வங்காலபாடு மற்றும் தால்பாடு கரையோரப் பகுதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற 1437 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேகநபர்கள் மூவரும் (03) ஒரு டிங்கி படகும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

19 Nov 2021

சட்டவிரோத போதைப்பொருட்கள் கொண்ட மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

தலைமன்னார் மணல் குன்றுகளில் இன்று (2021 நவம்பர் 15) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 03 கிலோ மற்றும் 100 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் (Crystal Methamphetamine) 03 சந்தேக நபர்களையும் ஒரு டிங்கி படகையும் கைது செய்யப்பட்டது.

15 Nov 2021

வெள்ளத்தில் சிக்கிய 288 பேர் கடற்படையினரால் மீட்பு

கடும் மழை காரணத்தினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக கடந்த 48 மணித்தியாலங்களில் (2021 நவம்பர் 08 முதல் 10 வரை) கடற்படையினர் நாட்டின் பல பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு 288 பேரை மீட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10 Nov 2021

சட்டவிரோத போதைப்பொருட்கள் கொண்ட ஒருவர் மன்னாரில் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2021 நவம்பர் 09) மன்னார், பேசாலை பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்ட போது 757 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் (Crystal Methamphetamine) சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

09 Nov 2021

வெள்ளத்தில் சிக்கிய 71 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்

கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கற்பிட்டி பாலவிய பகுதியில் சிக்கித் தவித்த 71 பேரை கடற்படை நிவாரணக் குழுக்களால் 2021 நவம்பர் 08 இரவு மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

09 Nov 2021

சீரற்ற காலநிலையின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

தீவை பாதிக்கும் பாதகமான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையினர் 35 கடற்படை நிவாரண குழுக்களை மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

08 Nov 2021

காலி பகுதியில் உள்ள பாலங்களில் சிக்கிய கழிவுகளை அகற்ற கடற்படை பங்களிப்பு

காலி கிங் ஆற்றின் குறுக்கே உள்ள முல்கட, அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் 2021 நவம்பர் 03 மற்றும் 4 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

06 Nov 2021