காலி பகுதியில் உள்ள பாலங்களில் சிக்கிய கழிவுகளை அகற்ற கடற்படை பங்களிப்பு

காலி கிங் ஆற்றின் குறுக்கே உள்ள முல்கட, அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் 2021 நவம்பர் 03 மற்றும் 4 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கிங் ஆற்றின் நீர்மட்டம் உயர்வதால் குப்பைகள், மரக்கட்டைகள், மூங்கில் போன்ற குப்பைகள் வெளியேறுவதை தடுப்பதன் மூலம் அப்பகுதியில் வெள்ள அபாயத்தை ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்கும் இலங்கை கடற்படை இந்த இடங்களில் குப்பைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு, அந்த தாழ்வான பகுதிகளில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைத் தவிர்த்துள்ளது.

இதன்படி, காலி பகுதியில் உள்ள முல்கட, அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றி தண்ணீரை வெளியேற்றுவதற்கு 2021 நவம்பர் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் தெற்கு கடற்படை கட்டளையின் விசேட சுழியோடி குழுவொன்று நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.