நடவடிக்கை செய்தி
ரூ .29 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்
கடந்த வாரத்தில் கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது, ரூ .29 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 98 கிலோ மற்றும் 715 கிராம் கேரளா கஞ்சா, 950 மில்லிகிராம் ஐஸ் போதைபொருளுடன் (Crystal Methamphetamine) 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
31 Oct 2020
கிழக்கு மற்றும் வடமேற்கு கடலில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் மூலம் 10 நபர்கள் கைது
கிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பகுதிகளில் 2020 அக்டோபர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
29 Oct 2020
சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கடற்படை நடவடிக்கைகள் மூலம் கைது
2020 அக்டோபர் 15 ஆம் திகதி முதல் 2020 அக்டோபர் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இனைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
21 Oct 2020
மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கியொன்று கடற்படை உதவியுடன் மீட்கப்பட்டது
2020 அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் கடற்படை மற்றும் காவல்துறையினர் இனைந்து பதவிய எத்தாவெட்டுனுவெவ மற்றும் மன்னார், நானாட்டான் பகுதிகளில் மேற்கொண்ட இரண்டு சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது பல வெடிபொருட்களையும் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டது.
20 Oct 2020
200 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படை உதவியுடன் கைது
இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து மன்னார் ஒலுதுடுவாய் பகுதியில் இன்று (2020 அக்டோபர் 18) மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது 200 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
18 Oct 2020
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 28 நபர்கள் கடற்படையினரால் கைது
2020 செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் 2020 அக்டோபர் 14 ஆம் திகதி வரையிலான இரண்டு வார காலப்பகுதியில், வட மத்திய, கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளைகளில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 28 நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
15 Oct 2020
சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 06 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது
கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து கடந்த அக்டோபர் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் வடக்கு, வட மத்திய மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது ஹெராயின் மற்றும் உள்ளூர் கஞ்சாவுடன் 6 சந்தேக நபர்களை கைது செய்தனர்.
14 Oct 2020
வடக்கு கடலில் இருந்து கேரள கஞ்சா பொதி யொன்று கடற்படை கைப்பற்றியது
இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து 2020 அக்டோபர் 11 ஆம் திகதி யாழ்ப்பாணம், மாதகல்துரை கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது 111 கிலோகிராமுக்கு மேற்பட்ட கஞ்சாவை கைப்பற்றியது.
12 Oct 2020
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு சந்தேகநபர் கடற்படையின் உதவியுடன் கைது
இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு ஆகியோரால் மன்னார், நருவிலகுளம் மற்றும் கிரிந்த பகுதிகளில் 2020 அக்டோபர் 08, 09 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு சந்தேக நபர் (01) கைது செய்யப்பட்டார்.
12 Oct 2020
33 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது
மன்னார், நருவிலிகுளம் பகுதியில் 2020 அக்டோபர் 09 அன்று இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, 33 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
10 Oct 2020