மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கியொன்று கடற்படை உதவியுடன் மீட்கப்பட்டது

2020 அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் கடற்படை மற்றும் காவல்துறையினர் இனைந்து பதவிய எத்தாவெட்டுனுவெவ மற்றும் மன்னார், நானாட்டான் பகுதிகளில் மேற்கொண்ட இரண்டு சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது பல வெடிபொருட்களையும் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டது.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் புல்மூட்டை காவல்துறை சிறப்பு பணிக்குழு அதிகாரிகள் இனைந்து பதவிய எத்தாவெட்டுனுவெவ பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, காட்டில் மறைத்து வைத்திருந்த இரண்டு 81 மிமீ மோட்டார் குண்டுகள், ஏலு 60 மிமீ மோட்டார் குண்டுகள் மற்றும் சுமார் 08 கிலோ எடை கொண்ட அழுத்த குண்டொன்று (Anti-Tank Pressure Mine) மீட்கப்பட்டன. கடந்த மனிதாபிமான நடவடிக்கையின் போது இந்த பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார், நானாட்டான் பகுதியில் மேற்கொண்டுள்ள மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று மீட்டுள்ளனர்.

இவ்வாரு பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக புல்மூட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவிடமும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி பரயானகுளம் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவிடமும் ஒப்படைக்கப்பட்டன.