சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 06 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து கடந்த அக்டோபர் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் வடக்கு, வட மத்திய மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது ஹெராயின் மற்றும் உள்ளூர் கஞ்சாவுடன் 6 சந்தேக நபர்களை கைது செய்தனர்.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது 01 கிராம் மற்றும் 15 மிலி கிராம் ஹெராயின் கொண்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அதே வீணில், மன்னார் உப்புக்குளம் பகுதியில் 790 மிலி கிராம் ஹெராயின் வைத்திருந்த 03 சந்தேக நபர்களை வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் மன்னார் பிரதேச ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து கைது செய்தனர்.

தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் அம்பலண்தோட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து தனமல்வில ஊவ குடாஓய பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது சுமார் 820 கிராம் கஞ்சா வைத்திருந்த ஒரு சந்தேக நபரை கைது செய்தனர். அந்த சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மீகஸ்வெவ பகுதியில் சுமார் 850 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருகுளம்பிட்டி, ஊவ குடாஓய மற்றும் மீகஸ்வெவ பகுதிகளில் வசிக்கும் 36 முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் மற்றும் போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பலாலி, மன்னார் மற்றும் தனமல்வில காவல் நிலையங்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.