200 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து மன்னார் ஒலுதுடுவாய் பகுதியில் இன்று (2020 அக்டோபர் 18) மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது 200 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கினைந்து மன்னார் பகுதியில் நடத்திய இந்த சிறப்பு நடவடிக்கையின் போது கடல் வழியாக ஒலுதுடுவாய் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு விநியோகத்திற்கு தயாராக இருந்த 10 பாலித்தீன் கவர்களில் 94 பார்சல்கலாக அடைத்து வைக்கப்பட்ட 200 கிலோகிராம் மற்றும் 825 கிராம் கேரள கஞ்சா இவ்வாரு கைது செய்யப்பட்டது.

மேலும், கோவிட் -19 பரவாமல் தடுப்பதற்காக வழங்கப்பட்ட அனைத்து சுகாதாரமான நடைமுறைகளையும் பின்பற்றி கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சா பொதி மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் இந்த மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களைத் தேடி கடற்படை மற்றும் காவல்துறை மேலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.