நடவடிக்கை செய்தி

மேற்குக் கடலில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கையின் போது 60 கோடி ரூபா பெறுமதியான போதைபொருட்களுடன் நால்வர் கைது

கடற்படையினர் இன்று (2021 ஜனவரி 04) நீர் கொழும்பு கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது பல நாள் மீன்பிடி படகொன்றில் கொண்டு சென்ற 100 கிலோ கிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) மற்றும் சுமார் 80 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருளுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

04 Jan 2021

போதைப்பொருள் கொண்ட 04 சந்தேக நபர்கள் தெற்கு கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

காலி, தொடங்தூவ கடல் பகுதியில் 2020 டிசம்பர் 31 ஆம் திகதி கடற்படையினர் மேற்கொண்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது பல நாள் மீன்பிடி படகொன்றில் கடத்திக் கொண்டு இருந்த 05 கிலோ மற்றும் 945 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine), 2 கிலோ மற்றும் 47 கிராம் ஹெராயின் மற்றம் 03 கிராம் கேரள கஞ்சா ஆகியவற்றையுடன் பல நாள் மீன்பிடி படகும் நான்கு (04) சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

01 Jan 2021

சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் ஒரு இந்திய மீன்பிடி படகுடன் 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படை இன்று (2020 டிசம்பர் 20) வடக்கு கடலில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு இந்திய மீன்பிடி படகுடன் 04 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

20 Dec 2020

வணிக வெடிபொருட்களுடன் சந்தேக நபரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இனைந்து 2020 டிசம்பர் 19 அன்று கலேவெல புலனவெவ பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வர்த்தக வெடிபொருட்களை சட்டவிரோதமாக மோட்டார் வண்டியில் கொண்டு சென்ற ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்

20 Dec 2020

39 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் 14 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

போதைப்பொருள் அச்சுறுத்தலை சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்திய கடற்படை, கடந்த இரண்டு வாரங்களில் தீவு முழுவதும் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, 39 கிலோ மற்றும் 197 கிராம் கஞ்சாவுடன் 14 சந்தேக நபர்களை கைது செய்தது.

16 Dec 2020

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகளுடன் இந்திய மீனவர்கள் 36 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை தீவின் பல கடல் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடிப் படகுகள், 36 இந்திய மீனவர்கள் மற்றும் பல மீன்பிடி பொருட்கள் இன்று (2020 டிசம்பர் 15) கைது செய்யப்பட்டன.

15 Dec 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 54 நபர்கள் கடற்படை நடவடிக்கைகள் மூலம் கைது

இலங்கை கடற்படையால் 2020 நவம்பர் 12 முதல் டிசம்பர் 13 வரை தீவின் பல்வேறு கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 54 நபர்கள், அவர்களின் மீன்பிடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

14 Dec 2020

கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 3538 கிலோ கிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் கடற்படை கைப்பற்றியது

கடந்த சில வாரங்களில் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, நாட்டிற்குள் கடத்த முயன்ற 3538 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் மூன்று (03) இந்தியர்கள் உட்பட 07 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

14 Dec 2020

200 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்ய கடற்படை உதவி

இன்று (2020 டிசம்பர் 06) மாரவில தொடுவாவ பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்களுடன் 100 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 100 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) ஆகியவற்றைக் கைது செய்ய கடற்படை உதவியது.

06 Dec 2020

‘புரெவி’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் வட மத்திய பொது மக்களுக்கு கடற்படையின் உதவி

2020 டிசம்பர் 02 ஆம் திகதி வடகிழக்கில் நாட்டிற்குள் நுழைந்த புரெவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை உதவியது

04 Dec 2020