மேற்குக் கடலில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கையின் போது 60 கோடி ரூபா பெறுமதியான போதைபொருட்களுடன் நால்வர் கைது

கடற்படையினர் இன்று (2021 ஜனவரி 04) நீர் கொழும்பு கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது பல நாள் மீன்பிடி படகொன்றில் கொண்டு சென்ற 100 கிலோ கிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) மற்றும் சுமார் 80 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருளுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சமூகத்திலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்தி கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதுக்காக இலங்கை கடற்படை அடிக்கடி நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. அதன் படி போதைப்பொருட்களைக் கொண்டு செல்லும் பல நாள் மீன்பிடிப் படகொன்று சமீபத்தில் காலி தொடங்தூவ கடல் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன. மேலும், இன்று நீர்கொழும்பு கடற்பரப்பில் மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடிப் படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு 09 மூட்டைகளில் நுட்பமாக மறைக்கப்பட்டு கொண்டு சென்ற 100 கிலோ கிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) மற்றும் சுமார் 80 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடி படகும் 04 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் தெரு மதிப்பு ரூ .600 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அனைத்து உளவுத்துறை சேவைகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாபம் தொடுவாவ பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு இலங்கை விமானப்படையும் உதவியது.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், போதைப்பொருள் மற்றும் பல நாள் மீன்பிடிப் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இலங்கை கடல் பகுதியில் நடக்கும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த கடற்படை தொடர்ந்து விழிப்புடன் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.