கடற்படையின் கயன்திகா அபேரத்ன புதிய இலங்கை சாதனைகளை படைத்தார்

கொழும்பு, சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் 2021 ஒக்டோபர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெற்ற 99 ஆவது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை கடற்படை வீராங்கனை கயன்திகா அபேரத்ன, மகளிருக்கான 1500 மீற்றர் மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரண்டு புதிய இலங்கை சாதனைகளை படைத்தார்.

31 Oct 2021

கிழக்கு கடற்படை கட்டளையின் உதவியுடன் திருகோணமலை திஸ்ஸ கல்லூரியில் நீர் விளையாட்டு போட்டித்தொடறொன்று நடைபெற்றது

நீர் விளையாட்டுக்கான ஆர்வத்தையும் திறனையும் வளர்க்கும் நோக்கில் திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் அமைந்துள்ள திஸ்ஸ கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நீர் விளையாட்டு போட்டித்தொடறொன்று 2021 ஏப்ரல் 05, அன்று திருகோணமலை துறைமுகத்தில் உள்ள பெப்பர்போட் (Pepperpot) இறங்குதுறைக்கு முன்னால் கடலில் கிழக்கு கடற்படை கட்டளையால் நடத்தப்பட்டது. கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் வைய்.என்.ஜெயரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் 4-வது துரித தாக்குதல் படகு படை மற்றும் கடல் அறிவியல் பீடத்தின் கடற்படை தொழில்நுட்ப பாடசாலை இனைந்து இந்த போட்டித்தொடரை ஏற்பாடு செய்தது.

07 Apr 2021

இன்டர் கிளப் மகளிர் முதல் பிரிவு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரில் சாம்பியன்களாக கடற்படை வெற்றி பெற்றது

இலங்கை கிரிக்கெட் நிருவனம் 2021 ஏப்ரல் 02 அன்று வெலிசர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்டர் கிளப் மகளிர் முதல் பிரிவு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படை பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டு 'விக்கெட் வித்தியாசத்தில் இராணுவ' ஏ 'அணியை தோற்கடித்தது.

03 Apr 2021

பாதுகாப்பு சேவைகள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

2021 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 11 ஆவது பாதுகாப்புச் சேவைகள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் சிறந்து விளங்கிய இலங்கை கடற்படை பாதுகாப்பு சேவைகள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்றது. போட்டியின் முடிவில், பரிசு வழங்கும் விழா 2021 மார்ச் மாதம் 20 ஆம் திகதி நாராஹேன்பிட இலங்கை இராணுவ டென்னிஸ் மைதானத்தில், கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் நடைபெற்றது.

21 Mar 2021