கிழக்கு கடற்படை கட்டளையின் உதவியுடன் திருகோணமலை திஸ்ஸ கல்லூரியில் நீர் விளையாட்டு போட்டித்தொடறொன்று நடைபெற்றது

நீர் விளையாட்டுக்கான ஆர்வத்தையும் திறனையும் வளர்க்கும் நோக்கில் திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் அமைந்துள்ள திஸ்ஸ கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நீர் விளையாட்டு போட்டித்தொடறொன்று 2021 ஏப்ரல் 05, அன்று திருகோணமலை துறைமுகத்தில் உள்ள பெப்பர்போட் (Pepperpot) இறங்குதுறைக்கு முன்னால் கடலில் கிழக்கு கடற்படை கட்டளையால் நடத்தப்பட்டது. கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் வைய்.என்.ஜெயரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் 4-வது துரித தாக்குதல் படகு படை மற்றும் கடல் அறிவியல் பீடத்தின் கடற்படை தொழில்நுட்ப பாடசாலை இனைந்து இந்த போட்டித்தொடரை ஏற்பாடு செய்தது.

இந்த போட்டித்தொடர் திருகோணமலை மண்டல கல்வி இயக்குநர் மற்றும் மாகாணத்தின் கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்டதுடன் இதில் காயக் போட்டிகள் மாணவிகளுக்காக திறந்த, 6 மற்றும் 7 வகுப்புகள், 9-10-11 வகுப்புகள் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் மற்றும் ஆசிரியர்கள் என்ற பிரிவின் கீழ் நடத்தப்பட்டது. மேலும், மாணவர்கள் மற்றும் கடற்படை படகோட்டம் குழுவினரால் கண்காட்சி படகோட்டம் நிகழ்வொன்று நடத்தப்பட்டதுடன் அங்கு Whaler pulling நிகழ்வொன்றும் நடத்தப்பட்டது. இதற்கிடையில், கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி நீர் விளையாட்டு நிகழ்வுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

ஏறக்குறைய இரண்டு வாரங்கள் நீடித்த நீர் விளையாட்டு குறித்த வெற்றிகரமான பயிற்சித் திட்டத்தின் முடிவில் நடைபெற்ற இந்த நீர் விளையாட்டுப் போட்டித்தொடர் பார்வையிட திருகோணமலை மாகாண மற்றும் மண்டல கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள், கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி, கட்டளை தளபதிகள், பாடசாலைகளின் அதிபர்கள், துறைத் தலைவர்கள், திஸ்ஸ கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாலுமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.