சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற உலர்ந்த மஞ்சள், ஏலக்காய் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தீவின் அல்லப்பிட்டி பகுதிக்கு அப்பால் கடற்பரப்பில் இன்று (2022 மார்ச் 30) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற 1828 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், 137 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் 134 விவசாய இரசாயனப் போத்தல்கள் ஆகியவற்றையுன் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கஞ்சதேவ நிறுவனத்தின் கடற்படையினர் இன்று காலை (2022 மார்ச் 30) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தீவின் அல்லப்பிட்டி பகுதிக்கு அப்பால் கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை அல்லப்பிட்டி கரைக்கு கொண்டு வந்து பரிசோதித்தபோது, அங்கிருந்து 36 சாக்குகளில் அடைக்கப்பட்ட 1828 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், 137 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 137 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் 500 மில்லி லீட்டர் மற்றும் 250 மில்லி லிட்டர் அளவுகளில் 134 விவசாய இரசாயனப் போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஊர்காவற்துறை தீவில் உள்ள வெண்புரவிநகர் பகுதியில் வசிக்கும் 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட பொருட்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்.