1418 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்

இலங்கை காவல்துறைனருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் 2022 மார்ச் 27 ஆம் திகதி மன்னார் உப்புக்குளம் பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1418 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட வலைகளுடன் (Monofilament Nets) சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி ஒரு சிலரால் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளை கட்டுப்படுத்த கடற்படை அடிக்கடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கஜபா நிறுவனத்தின் கடற்படையினர் மன்னார் பொலிஸாருடன் இணைந்து மன்னார் உப்புக்குளம் பகுதியில் 2022 மார்ச் 27 ஆம் திகதி நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1418 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் (Monofilament Nets) சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும்நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார், இருக்குளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.