மேலும் நொரோச்சோலையில் பல கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைது

இன்று (2022, மார்ச் 22) காலை நொரோச்சோலை மாம்புரி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டிருந்த சுமார் 41 கிலோ 540 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிருவனத்தின் நொரோச்சோலை விசேட கப்பகள் படையணியினர் இன்று (2022 மார்ச் 22) காலை மாம்புரி கடற்கரையில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடற்படை நடவடிக்கைகளால் கரைக்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்களால் கரையோரத்தில் கைவிடப்பட்ட 13 பொட்டலங்களில் அடைக்கப்பட்ட 41 கிலோ 540 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் வீதிப் பெறுமதி 12 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நொரோச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.