ரூ .52 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

மன்னார், ஒலுத்துடுவாய் கடற்பரப்பில் 2022 மார்ச் 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 175 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு டிங்கி படகு (01) கடற்படையினர் கைது செய்தனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்க, கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா மற்றும் இலங்கை கடற்படை கப்பல் கஜபா ஆகிய முகாம்கள் இணைந்து இன்று மாலை (2022 மார்ச் 18) மன்னார், ஒலுத்துடுவை கடற்பரப்புக்கு P-148 கடலோர காவல்படை படகு மற்றும் சிறப்புக் படகுகள் படையின் சிறிய படகொன்றுசோதனை நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளதுடன் குறித்த படகுகளின் கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான வகையில் டிங்கி படகு ஒன்றை சோதனையிட்டதில் இரண்டு சந்தேக நபர்கள் (02) மற்றும் 6 சாக்குகளில் அடைக்கப்பட்ட 175 கிலோ கிராம் கேரள கஞ்சா (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் வீதிப் பெறுமதி 52 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என நம்பப்படுகிறது.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 34 வயதுடைய வன்காலைபாடு உதயபுரத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.