சட்டவிரோதமாக கடத்திய வெடிபொருட்களுடன் ஒருவர் நிலாவேலி பகுதியில் கைது செய்யப்பட்டார்

திருகோணமலை, நிலாவேலி, எட்டாம் கட்டை பகுதியில் 2021 செப்டம்பர் 24, அன்று கடற்படை மற்றும் நிலாவேலி காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 27 வணிக ஜெல் குச்சிகள் மற்றும் 500 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களை கொண்டு சென்ற ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிறுவனம் மற்றும் நிலாவேலி காவல்துறை ஒருங்கிணைந்து 2021 செப்டம்பர் 24 ஆம் திகதி மாலை திருகோணமலை நிலாவேலி எட்டாம் கட்டை பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டுள்ளதுடன் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று அப்போது சோதனை செய்யப்பட்டது. குறித்த முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 27 வாட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் 500 மின்சாரமற்ற டெட்டனேட்டர்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நிலாவேலி பகுதியில் வசிக்கும் 28 வயதானவர் என அடையாளம் காணப்பட்டார். இதற்கிடையில் சந்தேக நபர் வெடிபொருட்கள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் நிலாவேலி பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டார்.