41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் தொன்டமனாரு வடக்கு கடற்பரப்பில் 2021 ஜூலை 19 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, கடற்படை நடவடிக்கைகளின் காரணத்தினால் கரைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் வீசப்பட்ட 139 கிலோ மற்றும் 100 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தீவைச் சுற்றி ரோந்து பணிகளை அதிகரித்துள்ளது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட 4 வது துரித தாக்குதல் ரோந்து படைப்பிரிவின் P 401 துரித தாக்குதல் ரோந்து படகுடன் P 177, P 178, Z183, Z 215 என்ற கடற்கரை ரோந்து படகுகள் மற்றும் CG 410 என்ற கடலோர காவல்படை படகு இனைந்து தொன்டமனாரு வடக்கு கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு நடவடிக்கையின் போது கடற்படை நடவடிக்கைகளின் காரணத்தினால் கரைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் வீசப்பட்ட 139 கிலோ மற்றும் 100 கிராம் கேரள கஞ்சா கொண்ட நான்கு (04) பாலிதீன் பைகளை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு ரூ .41 மில்லியனுக்கும் மேல் என்று நம்பப்படுகின்றதுடன் சர்வதேச கடல் எல்லைக் கோட்டு பகுதியில் இருந்து நாட்டிற்குள் கடத்த நினைத்து கடத்தல்காரர்களால் குறித்த கேரள கஞ்சாவை பெற்றுக்கொண்டு கடற்படை நடவடிக்கைகளின் காரணத்தினால் கரைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் வீசப்பட்டதாக கடற்படை சந்தேகிக்கிறது.

கொவிட்- 19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சா பொதிகள் தீ வைத்து அழிக்கப்பட்டது.