31 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் 2021 ஜூலை 15 ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கைகளின் போது, 103 கிலோ மற்றும் 750 கிராம் கேரள கஞ்சாவுடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தீவைச் சுற்றி ரோந்து பணிகளை அதிகரித்துள்ளது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட 4 வது துரித தாக்குதல் ரோந்து படைப்பிரிவின் பீ 415 துரித தாக்குதல் ரோந்து படகுடன் பீ 166 மற்றும் பீ 015 கடலோர காவல்படை படகுகள் இனைந்து காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு நடவடிக்கையின் போது பீ 166 படகு கரையை நோக்கி பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கும் போது குறித்த படகில் இருந்த நபர்கள் சந்தேகத்திற்கிடமான சில பார்சல்கள் கடலுக்கு வீசி தப்பி செல்ல முயன்றனர். அப்போது பீ 015 படகு மூலம் குறித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு மூன்று சந்தேகநபர்களுடன் கைது செய்யப்பட்டது. பீ166 கடலோர காவல்படை படகு மற்றும் பீ415 துரித தாக்குதல் படகு இனைந்து குறித்த கடல் பகுதியில் நடத்திய மேலதிக சோதனை நடவடிக்கையின் பொது கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட 103 கிலோ மற்றும் 750 கிராம் கேரள கஞ்சா கொண்ட மூன்று பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு ரூ .31 மில்லியனுக்கும் மேல் என்று நம்பப்படுகின்றதுடன் சர்வதேச கடல் எல்லைக் கோட்டு பகுதியில் இருந்து நாட்டிற்குள் கடத்த நினைத்து கடத்தல்காரர்கள் படகிற்குள் கஞ்சாவை வைத்திருக்கலாம் என கடற்படை சந்தேகிக்கிறது.

கொவிட்- 19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை பிரதேசங்களில் வசிக்கும் 20 தொடக்கம் 40 வயதுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.