வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை கடற்படை நிவாரண குழுக்களால் மீட்பு

நிலவும் பாதகமான வானிலை காரணமாக, பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. இதேவேளை, தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அவசர நிலைமைகளுக்கு உதவும் வகையில் 10 கடற்படை நிவாரணக் குழுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்படி, 2021 மே 13 ஆம் திகதி இரவு காலி உடுகம பகுதியில் உள்ள கிங் கங்கை நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 06 பேரை கடற்படை நிவாரண குழுக்கள் மீட்டுள்ளது.

முந்தைய நாள் இரவு கிங் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் காலி உடுகம பகுதியில் ஏற்பட்ட வெள்ள சூழ்நிலையில் படகொன்று கவிழ்ந்துள்ளதுடன் படகில் இருந்து விழுந்து வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு மரத்தில் தங்கியிருந்த 03 ஆண்களும் 01 பெண்னும் உட்பட வெள்ளம் காரணமாக ஒரு வீட்டில் சிக்கிக்கொண்டி இருந்த மேலும் இரு பெண்கள் காலி உடுகம பகுதியில் இணைக்கப்பட்ட கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவினரால் மீட்கப்பட்டது.

தற்போதுள்ள வெள்ள அபாயத்துடன் கலு, கிங் மற்றும் நில்வலா கங்கைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஏற்படக்கூடிய வெள்ள சூழ்நிலைக்கு தெவையான நிவாரணங்களை வழங்க, களுத்துறை மாவட்டத்தில் பரகொட, புலத்சின்ஹல மற்றும் வலல்லாவிட ஆகிய பகுதிகளை உள்ளடக்கி மூன்று நிவாரண குழுக்களும், காலி மாவடத்தில் உடுகம, தவலம, நாகொட மற்றும் பத்தேகம பகுதிகளை உள்ளடக்கி 06 நிவாரணக் குழுக்களும், மாதர மாவட்டத்தில் அதுரலிய பகுதியை உள்ளடக்கி 01 நிவாரணக் குழுவும் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பாதகமான காலநிலையை எதிர்கொண்டு பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும் நிவாரண குழுக்களை அனுப்பவும் கடற்படை தயாராக உள்ளது.