கடற்படை சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்

குச்சவேலி பொடுவக்கட்டு பகுதியில் 2020 நவம்பர் 11 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெடிபொருட்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குச்சவேலி பொலிஸாருடன் இணைந்து பொடுவக்கட்டு பகுதியில் நடத்திய இந்த சிறப்பு நடவடிக்கையின் போது ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட 47 வாட்டர் ஜெல் குச்சிகள், 36 மின் அல்லாத டெட்டனேட்டர்கள், 17 பாதுகாப்பு உருகி பாகங்கள் (தலா 01 அடி) மற்றும் 02 சார்ஜர்குடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர் 42 வயதான பொடுவக்கட்டு பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கண்டு பிடிக்கப்பட்ட வெடிபொருள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குச்சவேலி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.