காலி, வக்வெல்ல மற்றும் தொடங்கொட பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது

காலி பகுதியில் உள்ள வக்வெல்ல மற்றும் தொடங்கொட பாலங்களூடாக கடலுக்கு செல்லும் கிங் ஆற்றில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் தொடங்கி கடலுக்கு செல்லும் கிங் ஆற்றின் முக்கிய நதி மற்றும் துணை நதிகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு அதிக அளவு மழை பெய்தல், குப்பைகளை முறையற்ற முறையில் கொட்டுதல் மற்றும் மரங்கள் மற்றும் மூங்கில் புதர்களை வெட்டுதல் போன்ற பல காரணங்களின் விளைவாக ஆற்றின் உயரும் நீர் மட்டம் இத்தகைய குப்பைகளை சிக்க வைக்கிறது. மேலும், இந்த குப்பைகள் வக்வெல்ல மற்றும் தொடங்கொட குறுகிய பாலங்களில் சிக்கி, படிப்படியாக நீரின் ஓட்டத்தைத் தடுக்கிறது. இது தொடர்பாக நிலையான கவனம் செலுத்தும் கடற்படை தெற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த கடற்படையினர் குழுவை குறித்த இடங்களுக்கு அனுப்பி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு மட்டும், கடற்படை ஒன்பது சந்தர்ப்பங்களில் வக்வெல்ல மற்றும் தொடங்கொட பாலங்களில் சிக்கி இருந்த கழிவுகளை அகற்றியது. இதன் விளைவாக, இப்பகுதியில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தை கடற்படையால் தடுக்கப்பட்டது. அதே நேரத்தில், எதிர்கால பேரழிவுகளைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.