32 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது

கற்பிட்டி பத்தலங்குண்டுவ தீவுக்கு அருகிலுள்ள பரமுனை தீவில் 2020 செப்டம்பர் 17 அன்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 32 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளை கற்பிட்டி பத்தலங்குண்டுவ தீவுக்கு அருகிலுள்ள பரமுனை தீவில் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது பயன்படுத்தப்படாத மீன்பிடி குடிசையொன்றில் 15 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 கிலோ மற்றும் 145 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டது,

இவ்வாரு கடற்படை பறிமுதல் செய்த கேரள கஞ்சா பொதி மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.