எரக்கண்டி கடலில் மிதந்து கொண்டிருந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படும் வெடிபொருட்களை கடற்படை கைப்பற்றியது

திருகோணமலை எரக்கண்டி கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் பல வெடிபொருட்களை கடந்த தினம் கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது மீட்கப்பட்டது.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வெடிபொருட்களைப் பயன்படுத்துவது கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு பல பாதிப்புகள் ஏற்படுத்தும் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் நபர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், கடற்படை நடவடிக்கைகள் மூலம் இத்தகைய அழிவுகரமான செயல்களைத் தடுக்க கடற்படை தொடர்ந்து விழிப்புடன் உள்ளது. அதன் படி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் திருகோணமலை எராக்கண்டி மற்றும் புறா தீவுக்கு அருகே நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கடலில் மிதந்து கொண்டிருந்த பல வெடிபொருட்களை கைப்பற்றியது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 16 வாட்டர் ஜெல் குச்சிகள், 08 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 4, 8 மற்றும் 10 அங்குலங்கள் கொண்ட 07 பாதுகாப்பு உருகி பிரிவுகளையும், தலா 5 அடி நீளமுள்ள ஒரு பாதுகாப்பு உருகலையும் கடற்படை வெடிகுண்டு அகற்றும் குழுவால் பாதுகாப்புக்காக செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீன்பிடித் தொழிலில் வெடிபொருட்களைப் பயன்படுத்துவதால் மீனவர்களுக்கும் கடல் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க கடற்படை தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.