தெற்கு கடலில் பாதிக்கப்பட்ட கென்ய கப்பலுக்கு கடற்படையின் உதவி

கென்யக் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு கப்பலை பாதுகாப்பாக தரைக்கு கொண்டுவர கடற்படை உதவியது, இது பல நாட்களாக அனைத்து இயந்திரங்களின் முழுமையான செயலிழப்பு காரணமாக தெற்கு கடலில் துன்பத்தில் இருந்தது.

2020 ஜூலை 21, அன்று கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தில் பெறப்பட்ட ஒரு துயர சமிக்ஞைக்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கைக்கு தெற்கு பகுதியில் 170 கடல் மைல் (306 கி.மீ) தொலைவில் சிக்கியிருந்த இந்த கப்பலை இழுக்க கடற்படை இவ்வாரு உதவியது. கென்யா-கொடியிடப்பட்ட HORAKHTY (IMO No. 8805298) இந்த கப்பல் 13 ஊழியர்களுடன் கடைசியாக 2020 ஜூன் 22, அன்று தென் கொரிய துறைமுகமான புசானிலிருந்து புறப்பட்டது, கென்ய துறைமுகமான மொம்பசாவுக்கு செல்லும் வழியில் அதன் அனைத்து இயந்திரங்களும் முழுமையான செயலிழந்த நிலையில் இவ்வாரு பாதிக்கப்பட்டது.

இலங்கையின் தேடல் மற்றும் மீட்பு பிராந்தியத்தில் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான பொறுப்பை கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டது. கடந்த காலங்களில், இப்பகுதியில் துன்பத்தில் இருக்கும் கப்பல்களில் பல துயர சமிக்ஞைகளுக்கு கடற்படை பதிலளித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பின் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் 1974 இல் கையெழுத்திட்ட நாடு என்ற வகையில், இத்தகைய மாநாடுகளின் கீழ் இலங்கையின் சர்வதேச பொறுப்பு கடற்படையின் கீழ் செயல்படும் கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தால் உறுதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டும் இலங்கை கடற்படை கடல்சார் மீட்பு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட 41 தனித்தனியான சம்பவங்களில் 103 உயிர்களைக் காப்பாற்றியது. மேலும், கடந்த ஏழு மாதங்களில் கடற்படை 34 கப்பல்களுக்கு உதவியுள்ளது.