கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெற்கு கடற்படை கட்டளையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்ச்சி

கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெற்கு கடற்படை கட்டளையில் உள்ள கடற்படையினரின் பங்கேற்புடன் இரத்த தான வழங்கும் நிகழ்ச்சியொன்று 2021 டிசம்பர் 30 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தில் இடம்பெற்றது.

அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்னவின் பணிப்புரையின் பேரில், தென் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகேவின் வழிகாட்டலின் கீழ் இரத்ததான வழங்கும் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த மாற்று நிலையத்தில் இரத்த இருப்புக்களை நிரப்புவதே இந்த நிகழ்வின் நோக்கமானது. இந்த மகத்தான நோக்கத்திற்கு ஆதரவாக ஏராளமான கடற்படை வீரர்கள் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய நடத்தப்பட்ட இந்த இரத்த தான வழங்கும் நிகழ்வில் கடற்படையின் மருத்துவ உறுப்பினர்கள் மற்றும் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் இரத்தமாற்ற நிலையத்தின் அதிகாரிகள் பங்களித்தனர்.