தென்கிழக்கு கடற்படை கட்டளையில் பூப்பந்து பயிற்சி போட்டி தொடரொன்று நடைபெற்றது

தென்கிழக்கு கடற்படை கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பூப்பந்து பயிற்சி நிகழ்ச்சி மற்றும் போட்டி தொடரொன்று 2021 டிசம்பர் மாதம் 28 முதல் 30 ஆம் திகதி வரை தென்கிழக்கு கடற்படை கட்டளை பூப்பந்து மைதான வளாகத்தில் நடைபெற்றது.

கடற்படையின் உடற்தகுதி கொள்கைக்கு அமைவாக தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் முதல்தர பயிற்றுவிப்பாளர் ஜானக டயஸ் பூப்பந்து பயிற்சி நிகழ்ச்சியை நடத்தினார்.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களில் சிறந்து விளங்கிய லெப்டினன்ட் ஜே.எஸ்.பி.எஸ் பண்டார மற்றும் உப லெப்டினன்ட் ஏ.எச்.டி.டி தாருக ஆகியோர் முறையே வளர்ந்து வரும் வீரராகவும் விசுவாசமான வீரராகவும் பரிசுகளை பெற்றனர்.