நான்கு கடற்படை வீரர்களுக்கு சர்வதேச கடல்சார் நிறுவனத்தினால் அங்கீகாரமளிப்பு

நான்கு கடற்படை வீரர்களுக்கு 2021ஆம் ஆண்டிற்கான கடலில் சாகசம் மிகுந்த துணிச்சலுக்கான ஐஎம்ஓ விருது (2021- IMO Award for Exceptional Bravery at Sea) வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டது. கடற்படை வீரர்களின் துணிச்சலைக் கருத்தில் கொண்டு சர்வதேச கடல்சார் அமைப்பான ஐஎம்ஓ (International Maritime Organization – IMO) வினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

1948இல் நிறுவப்பட்ட சர்வதேச கடல்சார் அமைப்பான ஐஎம்ஓ என்பது ஐக்கிய நாடுகளின் விஷேட நிறுவனமாகும், இது கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் கப்பல்களால் கடல் மற்றும் வளிமண்டல மாசுபாட்டைத் தடுப்பதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளது. மேலும், இந்த அமைப்பு ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுகிறது. ஐஎம்ஓ ஆனது கடல் மாசுபாட்டைத் தடுக்கவும் பதிலளிக்கவும் வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் நிர்வாக மற்றும் சட்ட விஷயங்களைக் கையாள்கிறது, கப்பல்களில் இருந்து மாசுபாட்டைத் தடுப்பதற்கான சர்வதேச மாநாட்டிற்கு இணங்க செயல்படுகிறது. (International Convention for the Prevention of Pollution from Ships – MARPOL)

ஒவ்வொரு ஆண்டும்,‘Exceptional Bravery at Sea’ தங்களது கடமைக்கு அப்பால் விதிவிலக்கான துணிச்சல், கடல்சார் திறன்கள் மற்றும் கடலில் பெரும் துன்பங்களை எதிர்கொள்ளும் தைரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் தனிநபர்களுக்கு சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime Organization – IMO) அங்கீகாரமளிக்கிறது.

இலங்கை கடற்படைக் கப்பலான ரனாரிசியின் 04 கடற்படை வீரர்கள் தீயில் சிக்கிய ‘எம் ரீ நியூ டயனன்ட்’ ‘MT New Diamond’ கப்பலின் பணியாளர்களை மீட்பதில் அவர்களின் துணிச்சலுக்காக சர்வதேச கடல்சார் அமைப்பான ஐஎம்ஓ ஆல் அங்கீகரிக்கப்பட்டனர். கடற்படைத் தளபதியின் உத்தரவுக்கு இணங்க, கடற்படைக் கப்பலான ரணரிசி, 03 செப்டெம்பர் 2020 அன்று கிழக்கு கடற்பரப்பில் தீப்பிடித்த கப்பலில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையால் அனுப்பப்பட்டது.

குறித்த தீ விபத்தில் படுகாயமடைந்த கப்பலின் மூன்றாவது பொறியியலாளரைக் காப்பாற்ற திட்டமிட்ட ரணரிசி கட்டளையின் கட்டளை அதிகாரி கமாண்டர் கே.ஆர்.ஜி.ஆர்.எஸ். ரன்தென்னவுக்கும் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பலில் ஏறி படுகாயமடைந்த கப்பலின் மூன்றாவது பொறியாளரை ரணரிசி கப்பலுக்கு அழைத்து வருவதற்கு முன்வந்த லெப்டினன்ட் கே.ஜி.ஏ.எஸ்.எம்.விஜேரத்ன, கடற்படை வீரர் டி.எல்.கே.முடியன்சே மற்றும் கடற்படை வீரர் டி.பி.ஜி.யு.சேனாரத்ன. ஆகியோருக்கு இவ்வாரு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் மேலும் கடற்படைத் தளபதி குறித்த கடற்படை வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் மற்றும் கடற்படைத் தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.