கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிழக்கு கடற்படை கட்டளையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்ச்சி

கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களின் பங்குபற்றுதலுடன் திருகோணமலை கடற்படை கப்பல்துறை தளத்தில் இரத்தம் வழங்கும் நிகழ்ச்சியொன்று அண்மையில் இடம்பெற்றது.

அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்னவின் பணிப்புரையின் பேரில், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸின் வழிகாட்டலின் கீழ் திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்த மாற்று நிலையத்தில் முறையான இரத்த இருப்புக்களை பேண வேண்டியதன் அவசியத்தை கருத்திற்கொண்டு இந்த இரத்ததான வழங்கும் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. இந்த மகத்தான நோக்கத்திற்கு ஆதரவாக ஏராளமான கடற்படை வீரர்கள் தானாக முன்வந்து இரத்தம் வழங்கினர்.

மேலும், கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படை மருத்துவப் பணியாளர்களின் அனுசரணையுடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டது.