வட மத்திய கடற்படை கட்டளையின் இரத்த தானம் நிகழ்ச்சி

வட மத்திய கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த மாலுமிகளின் பங்கேற்புடன் இரத்த தான முகாமொன்று 2022 டிசம்பர் 23 ஆம் திகதி பூனாவ மலிமா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்னவின் பணிப்புரையின் பேரில், வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவின் வழிகாட்டலின் கீழ் வவுனியா போதனா வைத்தியசாலையின் இரத்த மாற்று நிலையத்தில் முறையான இரத்த இருப்புக்களை பேண வேண்டியதன் அவசியத்தை கருத்திற்கொண்டு இந்த இரத்தம் வழங்கும் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. இந்த மகத்தான நோக்கத்திற்கு ஆதரவாக பண்டுகாபய மற்றும் ஷிக்ஷா நிறுவனங்களைச் சேர்ந்த 94 கடற்படை வீரர்கள் தானாக முன்வந்து இரத்தம் வழங்கினர்.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க வடமத்திய கடற்படை கட்டளையின் கட்டளை வைத்திய அதிகாரி டாக்டர் கொமாண்டர் என்.எச்.எம்.சி அத்தநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த இரத்த தான நிகழ்ச்சிக்காக கடற்படை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி எம்.மாதுரி அவர்கள் மற்றும் வைத்தியசாலையின் பணியாளர்களும் பங்களிப்புச் செய்தனர்.