ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடற்படையினரால் அபிவிருத்தி செய்யப்பட்ட இரண்டு பாடசாலைகள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஹுங்கம, எத்படுவ கனிஷ்ட வித்தியாலயத்தில் மற்றும் சூரியவெவ, வீரியகம மகா வித்தியாலயத்தில் கடற்படையினரால் அபிவிருத்தி செய்யப்பட்ட வசதிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் பங்கேப்பில் இன்று (2021 நவம்பர் 29) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையின் 70வது ஆண்டு நிறைவுக்கு இணையாக தொடங்கப்பட்ட ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் வளம் இல்லாத சில பாடசாலைகளில் வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தெற்கு கடற்படை கட்டளை மூலம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஹுங்கம பகுதியில் எத்படுவ கல்லூரி மற்றும் சூரியவெவ பகுதியில் வீரியகம மஹா வித்தியாலயத்தில் வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் 2021 ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, கடற்படை வீரர்களின் நிதியுதவி மற்றும் தென் கடற்படை கட்டளையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்புடன், எத்பதுவ கனிஷ்ட கல்லூரி மற்றும் சூரியவெவ வீரியகம மஹா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியர் ஓய்வறையின் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடற்படையின் உதவியுடன் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. பல வருடங்களாக பற்றாக்குறையாக இருந்த வீரியகம மகா வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறையின் தேவை மிகவும் கவர்ச்சிகரமான முறையில் அலங்கார வேலைகள் செய்யப்பட்டு பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்ற சூழல் ஏற்படுத்தப்பட்டது.

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (2021 நவம்பர் 29) கடற்படைத் தளபதியின் தலைமையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்கு இணையாக கடற்படை சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில் 50 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வை கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவ தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன மற்றும் கடற்படைத் தளபதி உட்பட கடற்படையின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய எத்படுவ கனிஷ்ட வித்தியாலய அதிபர் திரு.எச்.ஏ.பிரியந்த அவர்கள் மற்றும் வீரியகம மகா வித்தியாலய அதிபர் திரு.பி.ருவன் பத்திரன ஆகியோர், மிகவும் குறைந்த வசதிகளைக் கொண்ட குழந்தைகளின் எதிர்கால கல்விக்கு கடற்படையின் பங்களிப்பை பாராட்டினர். இதேவேளை, இந்த உன்னதப் பணியை ஆரம்பித்த கடற்படைத் தளபதி உட்பட முழு கடற்படையினருக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

அத்துடன் வீரியகம மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர் ஓய்வறையுடன் கூடிய கட்டிடம் செத்பிரித் ஓதுதல் மத்தியில் திறந்து வைக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதியவர்களால் வருகை தந்த மரியாதைக்குரிய மகாசங்கத்தினருக்கு எட்டு பீரிகாரங்கள் பூஜை செய்யப்பட்டது.

எத்படுவ கனிஷ்ட கல்லூரி மற்றும் வீரியகம மகா வித்தியாலயத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் இன்று (2021 நவம்பர் 29) திறந்துவைக்கப்பட்டதன் மூலம், இலங்கையின் வசதியளிக்கப்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் குறுகிய காலப்பகுதியில் எட்டு (08) பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. கடற்படையின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாட்டின் எதிர்கால மானவர்களின் எதிர்கால கல்விக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்குவதற்கான கடற்படை சமூக பணி திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வுகளுக்காக தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகே, கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் மற்றும் கடற்படைப் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி ரியர் அட்மிரல் சுஜீவ செனவிரத்ன, தெற்கு கடற்படைக் கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் ஹரீந்திர ஏகநாயக்க, ஹம்பாந்தோட்டை கட்டளை அதிகாரி கொமடோர் மகேஷ் டி சில்வா, ஹம்பாந்தோட்டை வலயக் கல்விப் பணிப்பாளர் பி.வி.ஜி நிலானி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.