உக்ரேனிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

உக்ரேனிய பாதுகாப்பு ஆலோசகர் கர்ணல் வோலோடயிமர் பகாய் (Volodymyr Bakai) இன்று (2021 நவம்பர் 16) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

கர்ணல் வோலோடயிமர் பகாய், இந்தியாவின் புது டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரகத்துடன் இணைக்கப்பட்ட இலங்கைக்கான உக்ரைனின் பாதுகாப்பு, கடல்சார் மற்றும் விமானப் போக்குவரத்து ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். இந்த சந்திப்பின் போது, கடற்படைத் தளபதியும், உக்ரேனிய பாதுகாப்பு ஆலோசகரும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து அன்பாக கலந்துரையாடினர்.

மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.