மன்னார் பள்ளேமுனை கடற்படை முகாமில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படகுத்துறை திறக்கப்பட்டது

வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற, மன்னார் பள்ளேமுனை கடற்படை முகாமில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சிறிய படகுகள் நிருத்துவதுக்கான படகுத்துறை 2021 செப்டம்பர் 23 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் கடற்கரையில் நடைபெறும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க சிறிய படகுகள் ரோந்துப் பணியின் ஈடுபடும் போது பள்ளேமுனை கடற்படை முகாமில் சிறிய படகுகளை நிறுத்தும் வசதி இல்லாதது பாதுகாப்பு ரோந்துப் பணிகளை திறம்பட நடத்துவதற்கு தடையாக இருந்தது. அதன்படி, சிறிய படகுகளை நிறுத்துவதற்கு வசதியாக கடற்படையின் உதவியுடன் விரைவில் நிர்மானிக்கப்பட்ட புதிய படகுத்துறை, கடற்கரையின் பாதுகாப்பு ரோந்துப் பணியை திறம்பட உதவும்.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் வட மத்திய கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கொமடோர் நிலந்த ஹேவாவிதாரன, இலங்கை கடற்படை கப்பல் கஜபாவின் கட்டளை அதிகாரி கேப்டன் விஜித பண்டாரநாயக்க மற்றும் குறைந்த எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.