இலங்கையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் அலெக்ஸி ஏ. பொன்டரேவ் (Aleksei A.Bondarev) இன்று (2021 செப்டம்பர் 23) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

கர்னல் அலெக்ஸி ஏ. பொன்டரேவ் இலங்கையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட பிறகு கடற்படைத் தளபதியுடன் மேற்கொண்ட முதல் சந்திப்பு இதுவாகும். புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகருக்கு கடற்படை தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இங்கு இரு நாடுகளின் நீண்டகால உறவு மற்றும் இரு கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வுக்காக ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் பவெல் வி.இவாஷின்னிகோவும் (Pavel V.Ivashinnikov) உடன் இருந்தார் மற்றும் நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு சின்னங்களும் பரிமாற்றப்பட்டது.