இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எட்வர்ட் ஆபள்டன் அவர்கள் (Michael Edward Appleton) இன்று (2021 செப்டம்பர் 23) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, கடற்படைத் தளபதியும், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகரும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து அன்பாக கலந்துரையாடினர் மற்றும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு சின்னங்களும் பரிமாறிக்கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் இலங்கையில் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் துணைத் தலைமை அதிகாரி ஆண்ட்ரூ டிராவலர் (Andrew Traveller) அவர்களும் கலந்து கொண்டார்.