கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்ன கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று (2021 மே 20) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

ரியர் அட்மிரல் வய்.என் ஜெயரத்ன கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக பணியாற்றும் போது 2021 மே 19 திகதி முதல் கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, இது தொடர்பான நியமனக் கடிதத்தை ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்னவுக்கு இன்று (2021 மே 20) கடற்படைத் தளபதி வழங்கினார்.

கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் வய்.என் ஜெயரத்ன கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாகவும் தொடர்ந்து பணியாற்றுவார்.