ரியர் அட்மிரல் உபுல் த சில்வா மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் த சில்வா இன்று (2021 மே 18) மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, ரியர் அட்மிரல் உபுல் த சில்வா கடற்படை தலைமையகத்தில் பணிப்பாளர் நாயகம் நபர்கள் ரீதியாக பணியாற்றினார். ரியர் அட்மிரல் உபுல் த சில்வாவை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி மேற்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டதுடன் மேற்கு கடற்படை கட்டளையின் முன்னால் தளபதி ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து நியமனம் தொடர்பான கடமைகளையும் பொறுப்புகளையும் ரியர் அட்மிரல் உபுல் த சில்வாவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.

குறித்த கட்டளையில் கடமையாற்றிய ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷனவுக்கு கடற்படை அதிகாரிகள் தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்து பாரம்பரிய கடற்படை வணக்கத்துடன் விடைபெற்றனர்.