கொவிட் 19 தடுப்பூசி திட்டத்திற்கு கடற்படையின் ஆதரவு

கொவிட் 19 அபாயத்தை தடுப்பதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் கோவிட் 19 அச்சுறுத்தலை எதிர்கொண்டு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு இன்று (2021 மே 11) “சினோபார்ம்” (Sinopharm) தடுப்பூசியை கம்பஹ மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மருத்துவ அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கடற்படை வழங்கியது.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், மேற்கொள்ளப்படுகின்ற கொவிட் 19 இன் பரவலைக் கட்டுப்படுத்துவதுக்கான தடுப்பூசி திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் கம்பஹ மாவட்டத்தில் வத்தல மற்றும் ஜா-எல மருத்துவ அலுவலக பகுதிகளில் நடைபெற்று வருகின்ற தடுப்பூசி திட்டங்களுக்காக கடற்படை இரண்டு கடற்படை மருத்துவர்களைக் கொண்ட இரண்டு மருத்துவ குழுக்களை அனுப்பியது.

அதன்படி, சினோபார்ம் தடுப்பூசியின் முதல் கட்டம் இன்று கம்பஹ மாவட்டத்தில் வத்தலை மருத்துவ அலுவலர் அலுவலகத்தில் மற்றும் ஜா-எல, ஏகல நிவாசிபுர பகுதியில் கொவிட் 19 அச்சுறுத்தலை எதிர்கொண்டு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், COVID19 பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் எதிர்கால திட்டங்களில் சுகாதாரத் துறைக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க கடற்படை தயாராக உள்ளது.