கொழும்பு துறைமுக நுழைவாயிலில் விழுந்திருந்த பணப்பையை திருப்பி உரிமையாளரிடம் ஒப்படைத்த கடற்படை வீரர் கடற்படைத் தளபதியால் பாராட்டப்பட்டார்.

2021 ஏப்ரல் 27 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலுக்கு முன்னால் சாலையில் விழுந்திருந்த ஒரு பணப்பையும் அதில் உள்ள பணத்தையும் உரிமையாளரிடம் ஒப்படைத்த கடற்படை வீரர் ஏ.ஜி.எச்.எஸ் உதய குமார, எக்ஸ்.எஸ் 100126, வின் இந்த நற்செயலைப் பாராட்டி அவருக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2021 மே 10) கடற்படை தலைமையகத்தில் பாராட்டு கடிதத்தை வழங்கினார்.

கடற்படை வீரர் ஏ.ஜி.எச்.எஸ் உதய குமார, எக்ஸ்.எஸ் 100126 இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக பாதுகாப்பு பிரிவில் 2021 ஏப்ரல் 27 அன்று கடமையில் இருக்கும்போது கொழும்பு துறைமுகத்திற்கு முன்னால் சாலையில் விழுந்திருந்த இந்த பணப்பையை கண்டார். இதனையடுத்து, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்த பின்னர், பணப்பையும் பணமும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதன்படி, ஒரு கடற்படை உறுப்பினராக கடற்படையின் நற்பெயரை மேலும் உயர்த்தும் விதமாகவும், சீருடையின் கெளரவத்தைப் பாதுகாக்கும் வகையிலும் தனது கடமைகளைச் செய்து மற்ற மாலுமிகளுக்கும் சிறந்த முன்மாதிரியான இந்த கடற்படை வீரர் காட்டிய நேர்மையை பாராட்டி கடற்படைத் தளபதி குறித்த பாராட்டுக் கடிதத்தை வழங்கினார்.