ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2021 ஏப்ரல் 30) வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா தெற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக பணியாற்றினார். கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி புதிய தளபதியை வடக்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டதுடன் வடக்கு கடற்படை கட்டளையின் முன்னால் தளபதியான கொமடோர் ஜே.பி பிரேமரத்ன வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து நியமனம் தொடர்பான கடமைகளையும் பொறுப்புகளையும் ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.