காலி கலந்துரையாடல் 2021 அதிகாரப்பூர்வ வலைத்தளம் வெளியிடப்பட்டது

2021 காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (2021 ஏப்ரல் 30) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் வெளியிடப்பட்டது.

‘Regional Maritime Security Initiatives for Global Stability and Shared Prosperity’ என்ற கருப்பொருளின் கீழ் 11 வது முரயாக ஏற்பாடு செய்யப்படுகின்ற 2021 காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு 2021 அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் கொழும்பு காலி முகத் ஹோட்டலில் நடைபெற உள்ளதுடன் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று கடற்படைத் தளபதியால் வெளியிடப்பட்டது.

galledialogue.lk , என்ற இணைய முகவரி (Web address) மூலம் இந்த வலைத்தளத்துக்கு அணுக முடியும், இது மூலம் காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் அனைத்து விவரங்களும் உடனடியாக பெற முடியும்.

இன் நிகழ்வுக்காக கடற்படை பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரசந்ந மஹவிதான உட்பட அதிகாரிகள் கழந்துகொன்டனர்.