ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களின் இறுதி சடங்குகளுக்காக நிதி உதவி

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வப் கடற்படையின் பணியாற்றி ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களின் இறுதி சடங்குகளுக்காக அவர்களின் உறவினர்களுக்கு ரூ .100,000 வழங்க கடற்படை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்ற நிரந்தர மற்றும் தன்னார்வ அதிகாரிகள், 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்ற நிரந்தர மற்றும் தன்னார்வ பெண் அதிகாரிகள், 22 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்ற நிரந்தர / தன்னார்வ மற்றும் தன்னார்வ சிறப்பு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சிரேஷ்ட மற்றும் இளைய வீர்ர்கள், 15 வருட சேவை அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்ற நிரந்தர / தன்னார்வ மற்றும் தன்னார்வ சிறப்பு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பெண் சிரேஷ்ட மற்றும் இளைய வீராங்கனிகள், கடமையில் இருந்தபோது காயமடைந்து மருத்துவ காரணங்களால் ஓய்வு பெற்ற மாலுமிகளின் இறுதி சடங்குகளுக்காக இந்த உதவி வழங்கப்படும்.

ஓய்வுபெற்ற மாலுமி இறந்துவிட்டதுடன் 0117192525/0117192512 என்ற எண்ணில் கடற்படை நலப் பிரிவுக்குத் தெரிவித்த பின்னர் இறுதிச் சடங்கு முடிந்த 03 மாத காலத்திற்குள் இறப்பு பதிவு சான்றிதழ் அல்லது அடையாளச் சான்றிதழை சமர்ப்பித்த பின், இந்த உதவி ஓய்வு பெற்ற கடற்படை நபரின் சட்டபூர்வமாக திருமணமான மனைவி / கணவர் அல்லது இறந்த ஓய்வுபெற்ற கடற்படை நபரின் உறவினர்களுக்கு வழங்கப்படும்.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக தேவையான ஆவணங்களை 03 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க முடியாவிட்டால், இது தொடர்பாக கடற்படை நலன்புரி பிரிவுக்கு தெரிவித்த பின்னர் கடற்படை தளபதியின் சிறப்பு ஒப்புதலுக்கு உட்பட்டு இறுதி சடங்கு உதவிகளை வழங்குவதற்கான சாத்தியம் கருதப்படும்.