நாட்டின் குறைந்த வசதிகள் கொண்ட 08 பாடசாலைகள் இலங்கை கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகிறது

இலங்கை கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளை 2021 ஆம் ஆண்டில் அபிவிருத்தி செய்து நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் குழந்தைகளின் கல்விக்கு மிகவும் உகந்த சூழலையாக உருவாக்கும் கடற்படை சமூக சேவை திட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு, கிழக்கு, வட மத்திய, வட மேற்கு, தென்கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய கடற்படை கட்டளைகளில் 2021 ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கப்பட்டது. இந்த சமூக சேவை திட்டத்திற்கான நிதி பங்களிப்பு அனைத்து கடற்படை அதிகாரிகளும் மாலுமிகளும் தங்கள் மாத சம்பளத்தை தானாக முன்வந்து வழங்குகிறார்கள், மேலும் இந்த கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மனிதவளத்தையும் கடற்படை வழங்குகிறது.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக நாட்டை மூழ்கடித்துள்ள கொடூரமான எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையின் வெற்றிக்கு பங்களித்த பின்னர், அரசாங்கத்தின் பல்வேறு மேம்பாடுகளுக்கு திறமையான மனிதவளத்தையும் பிற வளங்களையும் வழங்குவதன் மூலம் கடற்படை அரசாங்கத்திற்கு உதவுகிறது.

இத்தகைய பின்னணியில், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் கருத்தின் அடிப்படையில் நாட்டின் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகள் கண்டுபிடிப்பதற்காக ஒரு சமூக சேவை திட்டத்தை கடற்படை தொடங்குகிறது. பிழைப்புக்கான போராட்டத்தில் வெற்றிபெற தொடர்ந்து முயன்று வரும் நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள வறிய கிராமங்களில் வாழும் குழந்தைகளின் கல்விக்கு ஆதரிப்பது ஒரு உன்னதமான சமூக பணியாகும். அதன்படி, கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள வசதியில்லாத கிராமங்களில் வாழும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக தீவு முழுவதும் உள்ள 07 கடற்படை கட்டளைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வசதிகள் கொண்ட 08 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய ஒவ்வொரு கட்டளைக்கும் ரூ .4.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த திட்டத்தின் கீழ், களுத்துறை மாவட்டத்தில், அகலவத்த பகுதியில் உள்ள கெலிங்கந்த முதன்மை கல்லூரியின் நான்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் புதுப்பிக்கவும், குழாய்கள் அமைப்பு மற்றும் கழிப்பறை வசதிகளை சரிசெய்யவும், குழந்தைகள் விளையாட்டு மைதானம் கட்டவும் மேற்கு கடற்படை கட்டளை திட்டமிட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தலே பகுதியில் உள்ள பன்சல்கொடெல்ல முதன்மை கல்லூரியின் பாதி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் மற்றும் நூலக கட்டடத்தை கடற்படையின் உதவியுடன் முடிக்க கிழக்கு கடற்படை கட்டளை திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், வட மத்திய கடற்படை கட்டளை தம்புல்லை வீர மொஹான் ஜெயமஹ கல்லூரியின் பல அடிப்படை தேவைகள் மற்றும் புதுப்பிப்புகளை நிறைவு செய்யும். புதிய புத்தகங்கள் நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும், வகுப்பறைகள் புதுப்பிக்கப்படும், கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்படும், பாடசாலையை உள்ளடக்கும் வகையில் புதிய பாதுகாப்பு சுவரொன்று கட்டப்படும். மேலும் கூடைப்பந்து மைதானமொன்றும் நிர்மாணிக்கப்படும்.

வடமேற்கு கடற்படை கட்டளையில், புத்தலம் மாவட்டத்தில் உள்ள எலுவங்குலம சிங்கள கல்லுரியில் வசதிகளும் அபிவிருத்தி செய்யப்படும், மேலும் பாடசாலை வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் ஆய்வக கட்டிடமொன்று கட்டப்படும். வசதிகள் இல்லாத நிலையில் இந்த பாடசாலையில் கல்வியைத் தொடரும் குழந்தைகளுக்கு மிகவும் சாதகமான கற்றல் சூழலை உருவாக்க இந்த நடவடிக்கை உதவும்.

இதற்கிடையில், தென்கிழக்கு கடற்படை கட்டளை மூலம் அம்பாரை பகுதியில் உள்ள ஹுலன்னுகே கல்லூரியின் பாழடைந்த கட்டிடங்கள், சிறிய ஆடிட்டோரியம், ஆய்வகம் மற்றும் கணினி ஆய்வகங்களை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளப்படும்.

மேலும், தென் கடற்படை கட்டளை மூலம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சூரியவெவ வீரியகம பாடசாலை மற்றும் ஹுங்கம எத்படுவ முதன்மை கல்லூரியில் தேங்காய் கிளைகள் மற்றும் தகரம் கூரை கொண்ட தற்காலிக வகுப்பறைகளில் மிகவும் குறைந்த வசதிகளுடன் படிக்கின்ற குழந்தைகளுக்கு அத்தியாவசிய இடமுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

இந்த சமூக சேவை திட்டத்தின் கீழ் வடக்கு கடற்படை கட்டளை அபிவிருத்திக்காக தேர்ந்தெடுத்த யாழ்ப்பாணம், மண்டத்தீவின் ரோமன் கத்தோலிக்க கல்லூரிக்கு கடற்படைத் தளபதி 2021 ஏப்ரல் 03 ஆம் திகதி விஜயம் செய்தார். அங்கு, மண்டத்தீவு கத்தோலிக்க திருச்சபையின் திருச்சபை பாதிரியார், கல்லூரியின் அதிபர் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கடற்படைத் தளபதியை அன்புடன் வரவேற்றனர். கடற்படை தளபதி கல்லூரியில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து பாடசாலை ஊழியர்களுக்கு விளக்கினார். கல்லூரிக்கு மிகவும் தேவையாக உள்ள நூலகம் மற்றும் கணினி ஆய்வகத்திற்காக இரண்டு மாடி கட்டடம் கட்டவும், தேவையான கணினிகள், கணினி நாற்காலிகள் மற்றும் மேசைகள் வழங்குவதற்கும், கல்லூரிக்கு தேவையான வகுப்பறைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கும் கடற்படை திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு 7 கடற்படை கட்டளைகளை உள்ளடக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடக்கும் விழாகளில் மேற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கமடோர் சுரேஷ் டி சில்வா, கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி ரியர் அட்மிரல் அனுர தனபால, வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ், வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பண்துல சேனாரத்ன, தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த கமகே, தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி கமடோர் ஜே.பி. பிரேமரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேற்கு கடற்படை கட்டளை


கிழக்கு கடற்படை கட்டளை


வட மத்திய கடற்படை கட்டளை


வடமேற்கு கடற்படை கட்டளை


தென்கிழக்கு கடற்படை கட்டளை


தெற்கு கடற்படை கட்டளை


வடக்கு கடற்படை கட்டளை