கடற்படையால் முதல் முறையாக கப்பல்களுக்காக கடல் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை நிர்மாணிக்கப்பட்டன

கடற்படை சமூக பணி திட்டத்தினால் முதல் முறையாக கப்பல்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவில் நிறுவப்பட்ட கடல் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (Sea water Reverse Osmosis Plant) இன்று (2021 பிப்ரவரி 24) வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவினால் திறந்து வைக்கப்பட்டன.

தொடர்ந்து ரோந்து செல்லும் கடல் நீர் சுத்திகரிப்பு இயந்திர வசதிகள் இல்லாத கப்பல்களுக்கு சுத்தமான நீரின் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் கப்பல்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதுக்காக கடற்படை சமூக பணி திட்டத்தினால் கடற்படையின் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி முதல் தடவையாக ஒரு நாளைக்கு 10,000 லிட்டர் கடல் நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட கடல் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை தயாரிக்கப்பட்டது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் செனாரத் விஜேசூரிய இன்று இலங்கை கடற்படை கப்பல் ஜெயசாகரவில் உள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு கடற்படை கட்டளை துணைத் தளபதி, துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட ஏராளமான மாலுமிகள் கலந்து கொண்டனர்.