மறைந்த ரியர் அட்மிரல் மொஹான் ஜெயமஹவின் நினைவு சிலை தம்புல்லையில் திறக்கப்பட்டது

தாய்நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான போர்வீரரான ரியர் அட்மிரல் மொஹான் ஜெயமஹவை நினைவுகூருவதுக்காக தம்புல்லை, தபுலுகம மப/கலே/வீர மொஹான் ஜெயமஹ மகா வித்தியாலயத்தில் கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட நினைவு சிலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இன்று (2021 ஜனவரி 29) திறந்து வைக்கப்பட்டன.

ரியர் அட்மிரல் மொஹான் ஜெயமஹ 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை, அராலி பாயிண்டில் எல்.டி.டி.இ பயங்கரவாதத் தாக்குதலின் போது தாய்நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த ஒரு துணிச்சலான போர்வீரராவார். அவரை நினைவுகூருவதுக்காக இந்த நினைவுச்சின்னம் கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்டதுடன் ரியர் அட்மிரல் மொஹான் ஜெயமஹவின் மனைவி திருமதி வினோதா ஜெயமஹ மற்றும் குடும்பத்தின் உறவினர்கள் நிதியுதவி செய்தனர்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ரியர் அட்மிரல் மொஹான் ஜெயமஹவின் மனைவி திருமதி வினோதா ஜெயமஹ, தம்புல்லை மேயர், வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ், இலங்கை கடற்படைக் கப்பல் பண்டுகாபயவின் கட்டளை அதிகாரி, தம்புல்லை மண்டல கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள், வீர மொஹான் ஜெயமஹ மகா வித்தியாலயத்தின் அதிபர் அனுர பண்டார லீலாரத்ன, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.