பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் பாடநெறி முடித்த 23 கடற்படை அதிகாரிகள் சான்றிதழ்களைப் பெற்றனர்

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பதினான்காம் (14 வது) பாடநெறியில் அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா 2020 டிசம்பர் 11 ஆம் திகதி கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

பதினான்காவது (14) பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் பாடநெறி 2020 ஜனவரி 06 முதல் டிசம்பர் 11 வரை சபுகஸ்கந்த, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் நடைபெற்றதுடன் இலங்கை இராணுவத்தின் 81 அதிகாரிகள், இலங்கை கடற்படையின் 23 அதிகாரிகள், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 27 அதிகாரிகள், பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மாலத்தீவு, நேபாளம், ஓமான், பாகிஸ்தான், ருவாண்டா, சவுதி அரேபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 18 அதிகாரிகள் உட்பட 149 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சான்றிதழ் விருது வழங்கும் விழாவில், பாடநெறியை முடித்த 23 கடற்படை அதிகாரிகள் தங்களது பாடநெறியை முடித்து (Passed Staff College- psc) சான்றிதழ்களைப் பெற்றனர். பாடநெறியில் கடற்படை அதிகாரிகளிடையே விதிவிலக்கான திறன்களை வெளிப்படுத்திய லெப்டினன்ட் கமாண்டர் (மின்) பீ.ஏ.ஆர்.எஸ் பமுனுசிங்கவுக்கு கோல்டன் அவுல் விருது (Golden Owl) மற்றும் தளபதி மரியாதை விருது (Commandant Honours) வழங்கப்பட்டது. லெப்டினன்ட் கமாண்டர் (திசைகாட்டி) டப்.பீ.பீ.என் பெரேரா தளபதி மரியாதை விருதைப் பெற்றார்.

மேலும், இந் நிகழ்வுக்காக பாதுகாப்புப் படைத் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி, மேஜர் ஜெனரல் டி.ஏ.பி.என் தெமன்பிடிய பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்கள் மற்றும் பாடநெறி அதிகாரிகளும் மற்றவர்களும் தற்போதுள்ள கோவிட் 19 பரவாமல் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப பங்கேற்றனர்.