இலங்கை கடற்படை தனது 70 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

நாட்டின் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட முதல் பாதுகாப்பு வளையமான இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவு விழா இன்று (டிசம்பர் 9) கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கடற்படை மரபுகள் மற்றும் மத விவகாரங்களை மையமாகக் கொண்டு ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் பரவலான நிகழ்வுகள் நடைத்தப்பட்டன. 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ‘இது உங்கள் கடற்படை, ‘உங்கள் கடற்படையை பற்றி அறிந்து கொள்ளுங்கள்’ என கருப்பொருளின் கீழ் டிசம்பர் 09 முதல் 13 வரை காலி முகத்திடம் முன் கடல் பகுதியில் நடத்தப்படுகின்ற கப்பல் கண்காட்சி மூலம் இந்த கப்பல்களின் வலிமை மற்றும் பங்களிப்பு குறித்து ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

09 Dec 2020