ரியர் அட்மிரல் விஜித மெத்தெகொட கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ஏறக்குறைய 34 ஆண்டுகால தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் விஜித மெத்தெகொட இன்று (2020 டிசம்பர் 04) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர் நாயகர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1986 ஆம் ஆண்டில் கடற்படைக்கு சேர்ந்த ரியர் அட்மிரல் விஜித மெத்தெகொட, தனது பதவி காலத்தில் துணை இயக்குநர் கடற்படை வழங்கள், இயக்குநர் கடற்படை வெளிநாட்டு கொள்முதல், இயக்குநர் கடற்படை ஒருங்கிணைந்த விநியோக மேலாண்மை அமைப்பு, இயக்குநர் கடற்படை வரவு செலவு, கடற்படை செயலாளர், கொமடோர் அதிகாரி வழங்கள், இயக்குநர் கடற்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியம், பணிப்பாளர் நாயகம் கடற்படை வரவு செலவு மற்றும் நிதி போன்ற மூத்த பதவிகளை வகித்துள்ளார்.