இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் எரிக் லெவடு அவர்கள் (Eric LAVERTU), 2020 டிசம்பர் 01 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேராவை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கான பிரெஞ்சு தூதரும், கிழக்கு கடற்படைத் தளபதியும் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களில் நல்லுறவு கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கிழக்கு கடற்படைத் தளபதி இலங்கைக்கான பிரெஞ்சு தூதருக்கு நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.