இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கேப்டன் சோன் அன்வின் (Sean Unwin) மற்றும் புதிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்க உள்ள கேப்டன் இயன் கெய்ன் (Ian Cain) ஆகியோர் இன்று (2020 டிசம்பர் 01) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

இலங்கையில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், குரூப் கேப்டன் சோன் அன்வின் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு முன் புதிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்க உள்ள கேப்டன் இயன் கேன் அறிமுகப்படுத்துவதுக்காக நடத்திய இந்த சந்திப்பில் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு ஆலோசகர்களும் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களில் நல்லுறவு கலந்துரையாடினர்.

மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினரும் நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.