பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு

2020 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற ஆயுதப்படை போர் வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் பொப்பி மலர் நிகழ்வுக்கு இனையாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு பொப்பி மலர் அணிவிப்பு இன்று (2020 செப்டம்பர் 29) கடற்படை தலைமையகத்தில் இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் (ஓய்வு) தயா சந்தகிரி மற்றும் இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தளபதி மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேரா ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

போரில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் முதன்முறையாக தொடங்கப்பட்ட பொப்பி மலர் கொண்டாட்டம் தற்போது தாய்நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அனைத்து போர்வீரர்களையும் நினைவுகூரும் வகையில் நடைபெறுகிறது. பொப்பி மலர் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானம் இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுடைய நலனுக்காக வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் இலங்கை கடற்படை சங்கத்தின் தளபதி, இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் தளபதி, ஆயுதப்படை நினைவுக் குழுவின் தலைவர் மற்றும் அந்தச் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.