கமடோர் ஜெயந்த கமகே தென்கிழக்கு கடற்படை கட்டளையின் செயல் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

கமடோர் ஜெயந்த கமகே தென்கிழக்கு கடற்படை கட்டளையின் செயல் தளபதியாக 2020 செப்டம்பர் 15 அன்று கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

அங்கு புதிய கட்டளை செயல் தளபதி அவர்களை கடற்படை மரபுகளுக்கமைய தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டன. மத சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து கமடோர் ஜெயந்த கமகே தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் முன்னாள் தளபதி ரியர் அட்மிரல் சேனரத் விஜேசூரிய, கட்டளையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை வழங்கப்பட்டது. எதிர்காலத்தில், அவர் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கட்டளைத் துணைத் தளபதி, துறைத் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.